Watch Video : சீதா மஹாலக்ஷ்மிக்கு வந்த மேரேஜ் ப்ரபோசல்… ஷாக்கிங் பதிலால் அசத்திய சீதா ராமம் நடிகை 

தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த நடிகை மிருணாள் தாகூர். சீதா மஹாலக்ஷ்மி என்ற கதாபாத்திரமாக நடிகர் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் மிருணாள் தாகூர். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யாவின் நிகழ்கால ஹீரோயினாக திஷா பதானியும்  வரலாற்று பகுதியில் சூர்யாவின் ஜோடியாக மிருணாள் தாகூரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

ஸ்டைலாக அசத்திய மிருணாள் :

சமீபத்தில் ராஜ் மேத்தா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டயானா பென்டி, இம்ரான் ஹாஷ்மி மற்றும் நுஷ்ரத் பாருச்சா உள்ளிட்டோரின் நடிப்பில் பிப்ரவரி 24ம் தேதி வெளியான திரைப்படம்  ‘செல்ஃபி’.  இப்படத்தில் ‘குடியே நி தெரி வைப்…’ என்ற பாடலுக்கு மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அக்ஷய் குமாருடன் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார் மிருணாள் தாகூர்.  

சோசியல் மீடியா மூலம் மிருணாளுக்கு வந்த வரன் :

தனது பிஸியான ஷெட்யுலிலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். இந்த வீடியோவிற்கு அவர் “அழகானதாக உணர்ந்தேன் பின்னர் இது டெலீட்டாகிவிடும்” என்ற கேப்ஷனுடன் ஈமோஜிகளையும் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த வீடியோ போஸ்டுக்கு ஏராளமான லைக்ஸ்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

க்யூட்டாக ‘நோ’ சொன்ன நடிகை : 

அதில் மிருணாள் தாகூரின் மிகவும் தீவிரமான ரசிகர் ஒருவர் “திருமணத்திற்கான உறவு என் தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டது” என பதிவிட்டு இருந்தார். ரசிகரின் இந்த க்யூட்டான மேரேஜ் ப்ரபோசலுக்கு மிகவும் அழகாக “என தரப்பில் இருந்து இதற்கு முடிவு நோ’ என நாக்கு ஒட்டிக்கொண்ட முகம் மற்றும் கண் சிமிட்டும் ஈமோஜியுடன்  பதிலளித்துள்ளார் மிருணாள். இந்த உரையாடலுக்கு மேலும் ஒரு ரசிகர் ” அவர் நிச்சயமாக ஒரு சாதாரண மனிதனின் ராணி அல்ல” என கமெண்ட் செய்து இருந்தார். இப்படி ஏராளமான கமெண்ட்கள் மிருணாள் தாகூரின் வீடியோ போஸ்டுக்கு குவிந்து வருகின்றன. 

அடுத்ததாக மிருணாள் தாகூர் நடிக்கும் இஷான் கட்டருடன் ‘பிபா’ மற்றும் ஆதித்யா ராய் கபூருடன் கும்ரா என்ற க்ரைம் திரில்லர் திரைப்படமும் அடுத்து வெளியாக தயாராக இருக்கின்றன. தமிழில் ஹிட் ஆக்ஷன் திரில்லர் படமாக 2019ம் ஆண்டு வெளியான ‘தடம்’ படத்தின் ஹிந்தி ரீ மேக் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் கும்ரா இயக்கியுள்ளார். இது ஏப்ரல் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *