Lokesh Kanagaraj: “மில்லியன் நன்றிகள் போதாது” – மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்!
’லியோ’ படத்தில் மிஷ்கின் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.
”உங்களுடன் இவ்வளவு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் போதாது. நீங்கள் படப்பிடிப்பில் இருந்தது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு ஒருபோதும் நான் போதுமான நன்றி சொல்ல முடியாது. ஆனால் மில்லியன் நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.